கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் சுப. உதயகுமார். இவர் முனைவர் பட்டம் பெற்ற நிலையில் ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியாவில் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்தார். கடந்த 1988 ஆம் ஆண்டு கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் அதற்கு தலைமை தாங்கி ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் சுப. உதயகுமார்.

இவர் 2014 ஆம் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த நிலையில் அந்த கட்சியின் சார்பில் கன்னியாகுமரியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் தோல்வியடைந்தார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு பச்சை தமிழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை தொடங்கிய நிலையில் தற்போது தன்னுடைய கட்சியினை தமிழக வாழ்வுரிமை கட்சியுடன் இணைத்துக் கொள்வதாக உதயகுமார் அறிவித்துள்ளார். மேலும் அவருடைய முடிவை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வரவேற்றுள்ளார்.