
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அவர் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது எதிர்க்கட்சிகள் கடும் அமளி செய்தனர். இருப்பினும் அதனை கண்டுகொள்ளாமல் அமளிகளுக்கு மத்தியில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர்.
இதைத்தொடர்ந்து பட்ஜெட்டை புறக்கணிப்பதாக கூறி சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். மேலும் நாடு எதிர்பார்த்த பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்துள்ள நிலையில் தற்போது நாடாளுமன்றத்தில் உரையாற்றி வருகிறார்.