
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சமீபத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில் 2025 26 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு பட்ஜெட்டில் ரயில்வே திட்டங்களுக்கு 6626 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 2948 கோடி மதிப்பீட்டில் 77 ரயில் நிலையங்களின் மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதாகவும் மொத்தமாக 2587 km நீளத்திற்கு புதிய தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் 33,467 கோடி மதிப்பீட்டில் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது மத்திய அரசு ரயில்வே திட்டங்களுக்கு என தமிழ்நாட்டிற்கு 6626 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.