பத்திரப்பதிவுத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள முறைகேடு வழக்கில், டிஐஜி ரவீந்திரநாத் கைது செய்யப்பட்டுள்ளார். தாம்பரத்தைச் சேர்ந்த சையது அமீனின் ரூ.10 கோடி மதிப்புள்ள நிலத்தை காந்தம்மாள் என்பவரின் பெயருக்கு போலியாக பத்திரப்பதிவு செய்ததாக சிபிசிஐடி போலீசார் ஏற்கனவே வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், தற்போது கலைவாணி என்பவரின் ரூ.50 கோடி மதிப்புள்ள சொத்தை போலியாக பத்திரப்பதிவு செய்ததாக புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டு, ரவீந்திரநாத் மீது மேலும் ஒரு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தொடர் கைதுகள், பத்திரப்பதிவுத்துறை மீதான நம்பிக்கை மக்களிடையே குறைந்து வருவதாகவும்,   அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இணைந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை போலியாக பதிவு செய்து, பொதுமக்களை ஏமாற்றி வந்திருக்கலாம் என கூறும் பொதுமக்கள் இந்த சம்பவம், குறித்து தீவிர விசாரணைகள் அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதேபோல் இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளையும் கைது செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும், இதுபோன்ற முறைகேடுகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க, பத்திரப்பதிவுத்துறையில் முழுமையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.