
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டுக்கு தற்போது இருந்தே கூட்டம் அதிகமாக வரை தொடங்கியுள்ளது. இன்று காலை பைக்கில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டுக்கு இருவர் சென்ற நிலையில் விபத்தில் ஒரு வாலிபர் உயிரிழந்த நிலையில் மற்றொரு வாலிபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு இன்று ரயிலில் சென்ற தொடர்களில் அவசரப்பட்டு விக்கிரவாண்டி இரங்க வேண்டும் என்பதற்காக ஓடும் ரயிலிலிருந்து குதித்ததில் ஒரு வாலிபர் உயிரிழந்த நிலையில் இருவர் பலத்த காயங்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு விபத்து சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது தமிழக வெற்றிக்கழகத்தின் திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் சீனிவாசன் மற்றும் துணைத் தலைவர் கலை ஆகியோர் இன்று விக்கிரவாண்டி நோக்கி காரில் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் உடல் நசுங்கி உயிரிழந்த நிலையில் காரில் இருந்த இருவர் பலத்த காயமடைந்துள்ளனர். மேலும் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை முதல் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாட்டுக்கு சென்றவர்களில் பலி எண்ணிக்கையானது 4 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.