
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஹெலிகாப்டர் தரையில் விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது புனே அருகே பவதான் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் திடீரென ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி தீ விபத்து ஏற்பட்டது.
இந்த பயங்கர விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 3 பேர் உடல் கருகி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.