
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் இன்று பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் மக்களை வீனஸ் திருமண மண்டபத்தில் சந்திக்கிறார். இவருடன் 18 பேர் இன்று உரையாட இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் தான் விஜய் மக்களை சந்திக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில் வளர்த்த போலீஸ் பாதுகாப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது பரந்துருக்கு நடிகர் விஜய் கேரவனில் வந்துள்ளார். இன்று 13 கிராம மக்களை நடிகர் விஜய் சந்திக்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் மட்டும் வெளி நபர்களுக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. மேலும் அனுமதி சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டும்தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் பரந்தூருக்கு வருகை புரிந்த நிலையில் இன்னும் சற்று நேரத்தில் மக்களை சந்திக்கிறார்.