
ஆளுநர் ரவி தமிழக அரசு சட்டசபையில் தாக்கல் செய்யும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு வைப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்றும் அவர் பத்து மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம் என்றும் தீர்ப்பு வழங்கியது. அதன் பிறகு ஆளுநர் ஜனாதிபதிக்கு அனுப்பிய பத்து மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்கியது.
இதனால் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தராக முதலமைச்சரானார். உச்ச நீதிமன்றம் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியதால் முதலமைச்சர் பல்கலைக்கழகங்களில்ன் வேந்தரான நிலையில் ஆளுநர் மாளிகை இன்னும் ஆளுநர் தான் பல்கலைக்கழகங்களில் வேந்தராக தொடர்கிறார் என்று அறிக்கை வெளியிட்டது. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டங்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று உதகையில் ஆளுநர் ரவி தலைமையில் பல்கலைக்கழக வேந்தர்கள் மாநாடு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த மாநாட்டினை மொத்தமாக புறக்கணிப்பதாக தமிழ்நாடு அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் அறிவித்துள்ளனர். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்ற திருநெல்வேலி மனோன்மணியம் பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகரும் பாதியில் மாநாட்டை புறக்கணித்துவிட்டு திரும்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த மாநாட்டில் மொத்தம் உள்ள 54 பல்கலைக்கழகங்களில் 32 பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதாக ஆளுநர் மாளிகை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆளுநர் ரவி துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசும் போது தமிழக அரசு நள்ளிரவில் துணை வேந்தர்களை மிரட்டியுள்ளது. இதனால்தான் மாநாட்டில் கலந்து கொள்ள வந்தவர்கள் கூட பாதியில் திரும்பி சென்று விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளார்.
அதாவது கல்விக்காக இந்த மாநாடு நடத்தப்படும் நிலையில் தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் வீட்டை நள்ளிரவில் தட்டி மாநாட்டில் பங்கேற்றால் வீடு திரும்ப முடியாது என மிரட்டியுள்ளனர். மேலும் இது போன்ற ஒரு அசாதாரண சூழல் இதற்கு முன்பு ஏற்பட்டது கிடையாது. ஆட்சியில் இருப்பவர்களுக்கு இந்த மாநாடு நடத்துவது பிடிக்கவில்லை என்று கூறினார்.