விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் எல்கேஜி படிக்கும் 4 வயது லியா லட்சுமி என்ற சிறுமி  செப்டிக் டேங்க் தொட்டிக்குள் விழுந்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் வகுப்பு ஆசிரியர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி வளாகங்களில் இருக்கும் கழிவு நீர் தொட்டி, குடிநீர் தொட்டி, கிணறுகள் உள்ளிட்ட அவற்றின் உறுதி தன்மையை சுய ஆய்வு செய்ய வேண்டும் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என விழுப்புரம் மாவட்ட காவல் உயர் அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.