கேரள மாநிலம் இடுக்கியில் பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த உ நிலையில், 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. கடந்த அக்டோபர் மாதம் இதேபோன்று நடந்த விபத்தில் 9 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.