பழிவாங்கும் அரசியலுக்கு தக்க பாடம் புகட்டப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின்ட்வீட் செய்துள்ளார். அதில், ‘ராகுல் தகுதிநீக்கம். புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்தியது. இந்தி திணிப்பு, பெருமளவு ஊழல் என அனைத்தும் மக்கள் மனதில் எதிரொலித்திருக்கிறது. திராவிட மண்ணில் பாஜக முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது. 2024 வெற்றிக்கு ஒன்றிணைந்து பணியாற்றுவோம்’ என ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.