
காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலில் 28 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசுதான் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அடுத்தடுத்து மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் சிந்து நதி ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்ததோடு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் உடனடியாக 48 மணி நேரத்திற்குள் இந்தியாவில் விட்டு வெளியேற வேண்டும் எனவும் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் விசா ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. அதோடு நேற்று வாகா எல்லையும் மூடப்பட்டது.
இந்த நிலையில் தற்போது பாகிஸ்தானின் அதிகார பூர்வ எக்ஸ் பக்கத்தை இந்தியாவில் முடக்கியுள்ளனர். அதாவது தாக்குதல் குறித்து தவறான தகவல்களை பரப்புவதை தடுப்பதற்காக x பக்கத்தை முடக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் மத்திய அரசு தவறான தகவல்களை தடுக்கும் நோக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளதால் அதனை ஏற்றுக்கொண்டு எக்ஸ் பக்கத்தை முடக்கியுள்ளனர்.