
இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக மோடி பதவியேற்று கொண்டதை தொடர்ந்து ஜெ.பி நட்டா, அமித்ஷா, சிவ்ராஜ் சவுகான், நிர்மலா சீதாராமன் ஆகியோர் மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டனர். பாஜகவில் ஒருவருக்கு புதிய பதவி என்ற முறை இருக்கிறது. இந்த நிலையில் ஜேபி. நட்டா மத்திய அமைச்சராக பதவி ஏற்றதால் யார் புதிய பாஜக தேசிய தலைவர் என்பது சஸ்பென்ஸ் ஆக மாறி உள்ளது. சிவ்ராஜ் சவுகான் தேசிய தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில் அவரும் மத்திய அமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.