
பாலியல் புகாரில் சிக்கிய பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரனின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது. பழனி அருகே சாமிநாதபுரம் அரசு பள்ளியில் உணவு திட்ட பொறுப்பாளருக்கு அவர் போதையில் தொல்லை கொடுத்திருக்கிறார். காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்கிறேன் என்று கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது.