
தமிழகத்தில் அடுத்து வரும் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இணைந்து போட்டியிடும் நிலையில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததால் பல கட்சிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அதிமுக கட்சிகளிலிருந்து நிர்வாகிகள் பலர் விலகி வர நிலையில் தேமுதிக மற்றும் புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளும் விலகுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது அதிமுக கூட்டணியிலிருந்து முதல் கட்சியாக SDPI அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. இந்த அறிவிப்பை அக்கட்சியின் பொதுச் செயலாளர் அபூபக்கர் சித்திக் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, பாஜக உடன் கூட்டணி வைக்கும் எந்த அரசியல் கட்சியுடனும் நாங்கள் கூட்டணி வைக்க மாட்டோம். தேவை என்றால் யார் காலிலும் விடுவார்கள். தேவையில்லை என்றால் யாரை வேண்டுமானாலும் எதிர்ப்பார்கள். இதுதான் பாஜகவின் நிலைப்பாடு.
அவர்களோடு கூட்டணி வைத்த கட்சிகள் எல்லாம் அழிந்துவிட்ட நிலையில் தற்போது தமிழ்நாட்டில் ஒரு கட்சி அழியப்போகிறது என்று கூறினார். மேலும் இதன் காரணமாக அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.