
பாரிஸ் ஒலிம்பிக் போட்டி மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்தியாவுக்கான முதல் பதக்கம் கிடைத்துள்ளது. அதாவது 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். மேலும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை வென்ற வீராங்கனை என்ற பெருமையையும் மனு பெற்றுள்ளார்.