
தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் இன்று காணொளி வாயிலாக மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதாவது பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் அதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மகளிர் தங்கும் கல்லூரி விடுதிகளில் வெளி ஆட்கள் வேலைக்காக வந்தால் அவர்களுடன் பெண் பணியாளர் ஒருவர் உடனிருந்து பணிகளை கவனிக்க வேண்டும்.
அதன் பிறகு internal complaints committee என்று அழைக்கப்படும் உள் புகார் குழுவை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் நியமிக்க வேண்டும். அனைத்து கல்லூரிகளிலும் காவலர் ஒருவரை நியமித்து அங்கு நடக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து உடனடியாக காவல்துறையினர் கண்காணிப்புக்கு கொண்டு செல்ல வேண்டும். மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதை பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை தலைமை செயலாளர் வழங்கியுள்ளார்.