மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் மோகன் லால். இவர் தமிழ் சினிமாவிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாள நடிகர் சங்க தலைவராக இருக்கிறார். இந்நிலையில் நடிகர் மோகன் லால் தற்போது மலையாள நடிகர் சங்கப் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதேபோன்று நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் 17 பேரும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

அதாவது மலையாள சினிமாவில் பாலியல் தொல்லைகள் நடிகைகளுக்கு அதிக அளவில் இருப்பதாக ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பாக இன்று நடிகர்கள் சங்கம் விசாரிப்பதாக இருந்தது. தற்போது மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உட்பட 17 பேர் ராஜினாமா செய்துள்ளனர். மேலும் பாலியல் புகார் எதிரொலியாக நடிகர் சங்க தலைவர் ராஜினாமா செய்தது கேரளாவில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.