தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடன இயக்குனராக இருப்பவர் ஜான் மாஸ்டர். இவர் வாத்தி படத்தில் இடம்பெற்ற மேகம் கருக்காதா பாடல், அரபிக் குத்து பாடல் மற்றும் நடிகர் விஜயின் வாரிசு படத்தில் இடம் பெற்ற ரஞ்சிதமே பாடல் உள்ளிட்ட பல படங்களில் பாடல்களுக்கு கொரியோகிராபி அமைத்துள்ளார். இவர் தேசிய விருது பெற்ற நடன இயக்குனர் ஆவார். இந்நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த 21 வயது பெண் நடன கலைஞர் ஒருவர் தனக்கு ஜானி மாஸ்டர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் கொடுத்த நிலையில் அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் பணியாற்ற ஜானி மாஸ்டருக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், ஜனசேனா கட்சியிலிருந்து பவன் கல்யாண் அவரை நீக்கினார். இதைத்தொடர்ந்து ஜானி மாஸ்டர் தலைமறைவான நிலையில் அவரை காவல்துறையினர் வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில் தற்போது கோவாவில் வைத்து ஜானி மாஸ்டரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரை ஹைதராபாத் அழைத்துச் செல்லும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க இருக்கிறார்கள்.