இந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழ் சினிமாவில் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெய்லர் படத்தில் காவால பாடலுக்கு நடனம் ஆடினார். பின்னர் அரண்மனை படத்திலும் நடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை Fair play செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பிய குற்றத்திற்காக நடிகை தமன்னாவிடம் தற்போது அமலாக்க துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முன்னதாக அந்த செயலியில் ஐபிஎல் போட்டிகளை பார்க்குமாறு தவறாக நடிகை தமன்னா ஊக்கப்படுத்தியதாக கூறிய அமலாக்கத்துறை அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது நடிகை தமன்னாவிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.