
கடலூர் நவநீதம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மநாதன்(43) . இவர் அந்த பகுதியின் அதிமுக வார்டு செயலாளராக பொறுப்பு வகித்துவந்தார். இந்நிலையில் இன்று புதுச்சேரி எல்லைப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவரை வழிமறித்து மர்ம கும்பல் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.