நாட்டில் ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படும். அந்த வகையில் கடந்த சில மாதங்களாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை என்பது உயர்ந்து வந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 14.50 காசுகள் குறைந்து 1966 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வீட்டு உபயோக சிலிண்டர் பயன்பாட்டுக்கான விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.