அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருளான பூண்டு விலை உயர்ந்து கொண்டே வருவது இல்ல தரிசிகளை கலக்கமடைய செய்துள்ளது. பத்து நாட்களுக்கு முன்பே கிலோ 100 முதல் 200 ரூபாய் வரை விற்பனையான பூண்டு தற்போது 160 முதல் 360 ரூபாயாக உயர்ந்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததாலும் வியாபாரிகள் பதுக்கி வைப்பதாலும் விலை உயர்ந்து உள்ளதாக கூறப்படும் நிலையில் விலையை கட்டுக்குள் வைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.