
மலையாள சினிமாவில் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக வெளியான ஹேமா கமிட்டி அறிக்கையால் மொத்த திரையுலகமும் ஆட்டம் கண்டுள்ளது. தொடர்ந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல் கொடுமைகள் குறித்து விவரித்து வருகிறார்கள். அதன்பிறகு மலையாள நடிகர் சங்க தலைவர் பதவியை மோகன்லால் ராஜினாமா செய்ததோடு மொத்த நடிகர் சங்கமும் கூண்டோடு கலைக்கப்பட்டது. இது பெரும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் மூத்த நடிகர்களான மோகன்லால் மற்றும் மம்முட்டி ஆகியோர்கள் மட்டும் ஏன் இந்த விவகாரத்தில் மௌனம் காக்கிறார்கள் என பலரும் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் பாலியல் அத்துமீறல்கள் குறித்து தற்போது முதல் முறையாக நடிகர் மோகன்லால் மனம் திறந்து உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நான் எங்கேயும் ஓடி ஒழியவில்லை. இங்கேயே தான் இருக்கிறேன். கேரள நடிகர் சங்கம் இது தயவுசெய்து அவதூறு பரப்பாதீர்கள். நடிகர் சங்கத்தில் உள்ள அனைவரும் பேசி முடிவெடுத்து தான் சங்கத்தை கலைத்தோம். இது தொடர்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும். மலையாளத் திரையுலகம் இந்த சிக்கலில் இருந்து விரைவில் மீண்டு வர வேண்டும் என்று கூறினார். மேலும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து புகார்கள் குவிந்து வரும் நிலையில் மலையாள திரையுலகை போன்ற பிற மொழிகளிலும் ஹேமா கமிட்டி போன்ற ஒரு குழு அமைத்து பாலியல் அத்துமீறல் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.