கர்நாடக சட்டப்பேரவை 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை முதலமைச்சர் சித்த ராமையா தாக்கல் செய்து உரையாற்றியுள்ளார். பெங்களூரு பல்கலைக்கழகத்தின் பெயரை டாக்டர் மன்மோகன் சிங் பல்கலைக்கழகம் என மாற்றுவதாக கர்நாடக பட்ஜெட்டில் முதலமைச்சர் சித்த ராமையா அறிவித்துள்ளார்.

மேலும் கர்நாடகத்தில் ஜெயின, பௌத்த, சீக்கிய கிறிஸ்தவ சமுதாய முன்னேற்றத்திற்கு கர்நாடக பட்ஜெட்டில் 350 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கர்நாடகத்தில் உள்ள வக்பு சொந்தமான இடத்தில் மகளிருக்கான 15 கலை கல்லூரிகள் அமைக்கப்படும் .