
சமூக வலைதளத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்தை பதிவிட்ட வழக்கில் எஸ்.வி.சேகருக்கு, விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஒருமாத சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
இந்த உத்தரவை மேல்முறையீடு செய்ய அனுமதி அளித்த உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், சிறை தண்டனையை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்தும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.