
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு ஒரு வருடங்கள் ஆகும் நிலையில் அவருடைய ஜாமீன் வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில் பாலாஜி வழக்கில் கைப்பற்றப்பட்ட பென்டிரைவ் போன்ற முக்கிய ஆவணங்கள் எங்கே.? பென்ட்ரைவ் போன்றவற்றில் தன்னுடைய பங்கு இல்லை என்று செந்தில் பாலாஜி தரப்பு கூறுகிறதே.?
நேரடியாக கேட்கப்படும் சாதாரண கேள்விக்கு கூட அமலாக்கத்துறையிடம் பதில் இல்லை. இன்று உங்களிடம் பதில் இல்லை என்றால் நாளை பதிலோடு வாருங்கள் என்று கூறி வழக்கு விசாரணையை நாளை ஒத்தி வைத்துள்ளார். மேலும் வழக்கில் அமலாக்கத்துறையிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிமன்றம் விசாரணையை நாளை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.