
பொங்கல் பண்டிகை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ அரிசி, சர்க்கரை, முழு கரும்பு, பொங்கல் பரிசு தொகப்புடன் இலவச வேட்டி, சேலையும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 2.20 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.
இந்த நிலையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோக பணிகளுக்காக ஜனவரி 3ம் மற்றும் 10ம் தேதி ரேசன் கடைகள் செயல்படும் என கூட்டுறவுத்துறை அறிவிப்பு. இதற்கு மாற்றாக ஜனவரி 15 மற்றும் பிப்ரவரி 22ம் தேதி விடுமுறை அறிவிக்கப்படுகிறது