இந்திய சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான். இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்று இருந்த வீர ராஜா வீரா பாடல் சிவா ஸ்துதி பாடலைப் போலவே உள்ளதாக ஏ.ஆர் ரகுமான் மீது வழக்கு தொடரப்பட்டது. ஏற்கனவே ஏ.ஆர் ரகுமான் சிவா ஸ்துதி பாடலால் ஈர்க்கப்பட்டு அதன்படியே வீர ராஜா பாடலை இயக்கி இருந்தேன் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு தற்போது டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் காப்புரிமை விவகாரத்தில் 2 கோடி செலுத்த வேண்டும் என்று  உயர்நீதிமன்றம் ஏஆர் ரகுமானுக்கு உத்தரவிட்டுள்ளது.