
மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி உடல் நல குறைவால் இன்று காலமானார். இவருக்கு வயது 89. எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான இவரது மறைவிற்கு அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரின் இறுதி சடங்கு இன்று பிற்பகல் மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் நடைபெறும் என அவரது மகன் துஷார் காந்தி தெரிவித்துள்ளார். 1934 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி டர்பனில் பிறந்த அருண் காந்தி தனது தாத்தாவை பின்பற்றி சமூக சேவையில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.