மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பாஜக கூட்டணி அதிக அளவில் ஆன தொகுதிகளை கைப்பற்றி வெற்றி வாகை சூடி உள்ளது. முத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றதால் முதல்வராக தேவேந்திர பாட்னாவிஸை நியமிக்க வேண்டும் என்று அக்கட்சி தீவிரம் காட்டி வருகிறது.

ஆனால் மீண்டும் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக வேண்டும் என்று பாஜகவுக்கு அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது. இதனால் புதிய முதல்வர் யார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் தற்போது ஆளுநரை சந்தித்து ஏக்நாத் ஷிண்டே தன்னுடைய ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். மேலும் தேவேந்திர பார்ட்னாவிஸ் முதல்வராக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.