
தமிழகத்தில் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் 6000 ரூபாய் ரொக்கமாக நிவாரண நிதி வழங்கப்படும் என்ற முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு எதிராக ராமதாஸ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
ரேஷன் கடைகள் மூலமாக ரொக்கமாக நிவாரண நிதியை கொடுத்தால் அதிக அளவில் முறை கேட்ட நடைபெறும் என்பதால் வங்கி கணக்கில் செலுத்த உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.