இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா தற்போது ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதன்படி ரெப்போ வட்டி விகிதமானது = 6.25 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா தலைமையில் நாணய கொள்கை குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் போது தான் 0.25 சதவீதம் ரெப்போ வட்டி விகிதத்தை குறைப்பதாக அவர் அறிவித்தார். இதனால் கடந்த இரண்டு மாதத்தில் ரெப்போ வட்டி விகிதமானது 0.50 சதவீதம் வரை குறைந்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பால் வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான தவணைத்தொகை குறைய வாய்ப்புள்ளது.