
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் சகோதரர் கோபால் ஜோஷியை பெங்களூர் போலீசார் மகாராஷ்டிராவில் வைத்து அதிரடியாக கைது செய்தனர். ஜே.டி.எஸ் முன்னாள் எம்எல்ஏ-வின் மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மக்களவைத் தேர்தல் நடைபெற்ற போது கோபால் ஜோஷி மற்றும் இரண்டு பேர் தன்னிடம் 2 கோடி ரூபாய் வாங்கியதாகவும் தனது கணவருக்கு வாய்ப்பு வழங்குவதாக கூறி ஏமாற்றியதாகவும் அந்த பெண் புகார் அளித்துள்ளார்.