
தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக கோடை மழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், மின்னல் தாக்குவது, வீடு இடிந்து விழுவது என இதுவரை 12 பேர் பலியாகியிருக்கின்றனர். மேலும் சில நாட்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.