தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில் அடுத்த மாதம் ரிசல்ட் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது அரசு தேர்வு துறை ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கணினி அறிவியல் பாடத்தில் 24-வது கேள்வி தவறாக கேட்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த கேள்விக்கு சரியாகவோ அல்லது தவறாகவோ பதிலளித்திருந்தால் இரண்டு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. ஆனால் அந்த கேள்விக்கு கட்டாயமாக பதில் வழங்கி இருக்க வேண்டும். அப்படி பதில் வழங்கி இருந்தால் அது சரியாக இருந்தாலும் தவறாக இருந்தாலும் கண்டிப்பாக மதிப்பெண் உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதேபோன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விலும் ஒரு கேள்வி தவறாக இருந்ததால் அந்த கேள்விக்கு மதிப்பெண் வழங்கப்படும் என்று முன்பு தேர்வு துறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.