
தமிழக சட்டசபையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் தொடர்பாக பேச சட்டசபை உறுப்பினர்கள் நோட்டீஸ் வழங்கிய நிலையில் அதற்கு சபாநாயகர் அனுமதி கொடுத்தார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இது பற்றி பேசும்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்டது மிகவும் கொடூரம் என்று கூறினார். அதன்பிறகு குற்றவாளியை கைது செய்த பின்னரும் குறை சொல்வது அரசியல் ஆதாயத்திற்கு மட்டும்தான் என்று கூறினார். அதன் பிறகு போராட்டங்கள் நடத்துவதற்கு முறையாக அனுமதி பெற வேண்டும். யாராக இருந்தாலும் போராட்டம் நடத்த அனுமதி பெறுவது அவசியம். ஆளுங்கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தப்பட்டதால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் தான் போராட்டம் நடத்த அனுமதி என்பது வழங்கப்படும் என்று கூறினார். முன்னதாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த விவகாரத்தில் சார் என்ற ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக ஆளும் கட்சியினர் தொடர்ந்து குற்றம் சாட்சி வரும் நிலையில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.