
இந்திய தேர்தல் ஆணையம் விடுதலை சிறுத்தைகள் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக அறிவித்துள்ளது. நேற்று நாம் தமிழர் கட்சியும் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி ஆக அறிவிக்கப்பட்டது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் குறிப்பிடத்தக்க வாக்குகளை பெற்றதால் தற்போது மாநில கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் தேர்தல் சின்னமாக பானை சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளதாக தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்னும் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை தேர்தல் சின்னமாக அதிகாரப்பூர்வமாக இன்று இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. pic.twitter.com/6F4hB98yGx
— Thol. Thirumavalavan (@thirumaofficial) January 10, 2025