நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற தனது கட்சி பெயரை “தமிழக வெற்றிக் கழகம்” என தேர்தல் ஆணையத்தில் அதிகாரப்பூர்வமாக மாற்றம் செய்தார். இதனையடுத்து, கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பழைய போஸ்டரை நீக்கிவிட்டு “தமிழக வெற்றிக் கழகம்” என்ற புதிய போஸ்டரை பதிவிட்டுள்ளார். தற்போது புதிய போஸ்டரை ட்ரெண்டிங் செய்யும் தவெக-வினர், 2026 சட்டமன்ற தேர்தல் நமது இலக்கு’ என்று பதிவிட்டு வருகின்றனர்.