திருச்சியில் ஏப்ரல் 2-வது வாரத்தில் மிகப்பெரிய மாநாடு நடைபெறும் என்று அதிரடி அறிவிப்பை ஓபிஎஸ் வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் இருக்கும் அதிமுக தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறிய அவர், அதிமுக இயக்கத்தை மீட்டெடுத்து வளர்க்க போகிறோம். விரைவில் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்கப் போகிறோம் என அறிவித்துள்ளார்.