
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 28-ம் தேதி வரை அவகாசம் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். மின் இணைப்பை ஆதார் உடன் இணைக்காமல் இன்னும் 7 லட்சம் பேர் உள்ளனர் என்றும், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இதுவரை 2.60 கோடி பேர் இணைத்துள்ளனர் என்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார். மேலும் பிப்ரவரி 28ஆம் தேதிக்கு மேல் அவகாசம் வழங்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே பிப்ரவரி 15ஆம் தேதி (இன்று) மாலை வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.