
இந்தியாவின் அண்டை நாடுகளான மியான்மர் மற்றும் தாய்லாந்தில் மிகப்பெரிய அளவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக மியான்மரில் கட்டப்பட்டு வந்த ஒரு மிகப்பெரிய அடுக்குமாடி கட்டிடம் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட நேற்று மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் ரிக்டர் அளவுகோலில் 7.7 என்ற அளவில் பதிவானது.
இந்நிலையில் நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 704 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு 1670 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் இன்னும் பலர் அந்தகட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதோடு பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.