
தமிழக அமைச்சரவையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக மாற்றம் செய்துள்ளார். அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். இதன் காரணமாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு மின்துறை கூடுதலாகவும், அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வத்துறை கூடுதலாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு பொன்முடியிடம் இருந்த வனத்துறை பொறுப்பு கூடுதலாக அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் வழங்கப்பட்டுள்ளது. அதோடு கடந்த முறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மனோதங்கராஜ் மீண்டும் அமைச்சர் அவையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு எந்த இலக்கா ஒதுக்கப்பட்டுள்ளது என்று அறிவிப்பு வெளிவரவில்லை. மேலும் அவருக்கு பால்வளத் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.