
மகாராஷ்டிராவை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கேதார் ஜாதவ், ஏப்ரல் 8ஆம் தேதி பாஜகவில் (BJP) இணைந்து, அரசியலுக்கு தனது முதல் கட்ட படியை வைத்துள்ளார்.
மும்பையில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாநில பாஜக தலைவர் சந்திரசேகர பவன்குளே முன்னிலையில் அவர் கட்சி உறுப்பினராக சேர்ந்தார்.
ஆல் ரவுண்டர் வீரராக இந்தியா அணியில் விளையாடிய கேதார், தற்போது அரசியல் வழியில் தனது பயணத்தை தொடக்கிறார்.
#WATCH | Former Indian Cricketer Kedar Jadhav joins BJP in the presence of Maharashtra minister and state BJP chief Chandrashekhar Bawankule in Mumbai. pic.twitter.com/4reAKk7F1Y
— ANI (@ANI) April 8, 2025
கேதார் ஜாதவ் ஜூன் 2024-இல் கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெற்றார். புனேவில் பிறந்த அவர், இந்திய கிரிக்கெட் அணியில் 73 ஒருநாள் போட்டிகளில் 1389 ரன்கள் எடுத்ததோடு, பாகம் நேரங்களிலேயே பந்து வீச்சிலும் களமிறங்கி 27 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
அவருக்கு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் நெருங்கிய நண்பர் என்ற பெயரும் உண்டு. 2014-இல் ராஞ்சியில் இலங்கைக்கு எதிராக அவர் தனது முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.
IPL-ல் கேதார் ஜாதவ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
2017-ல் புனேவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் விளையாடிய 120 ரன் இன்னிங்ஸ் ரசிகர்களால் இன்னும் நினைவுகூரப்படுகிறது.
அந்த போட்டியில் இந்திய அணி 351 ரன்கள் chase செய்யும் போது, கேதார் மற்றும் விராட் கோஹ்லி இணைந்து 200 ரன்கள் சேர்த்து, 11 பந்துகள் இருந்தபோதே இந்தியா வெற்றிபெற உதவினர்.