தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று அமெரிக்கா சென்றுள்ளார். அவர் நேற்று சென்னையில் இருந்து விமானத்தில் கிளம்பிய நிலையில் அவரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட திமுக முக்கிய நிர்வாகிகள் பலரும் அவரை வழி  அனுப்பி வைத்தனர். முதல்வர் ஸ்டாலின் எமிரேட்ஸ் விமானத்தில் துபாய் வழியாக அமெரிக்கா சென்றார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் சென்ற எமிரேட்ஸ் விமானத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால் அதிகாரிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட விமானத்தை சோதனை செய்தனர். அப்போது அதில் வெடிகுண்டு இல்லை என்பது தெரியவந்தது. மேலும் மர்ம நபர்கள் வெடிகுண்டு வைத்ததாக போலியாக மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது. இருப்பினும் முதல்வர் ஸ்டாலின் சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.