இன்ஃப்ளுயன்சா வைரஸ் நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் மட்டும் பரிசோதனை செய்ய வேண்டும். காய்ச்சல் மற்றும் இருமல் உள்ளவர்களுக்கு சோதனையோ அல்லது மருத்துவமனையில் அனுமதியோ தேவையில்லை. தீராத காய்ச்சல், தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி இருந்தால் மட்டும் பரிசோதனை செய்யலாம். வீட்டு தனிமைப்படுத்துதலில் இருப்போர் 104, 0108ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.