தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை எதிரொலியாக திருவாரூரை தொடர்ந்து மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி ஏற்கனவே திருவாரூர், காரைக்கால்  மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தஞ்சை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், நாகை மாவட்டத்தில் 1-8ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு உள்ளனர். கனமழை எச்சரிக்கையால் அடுத்தடுத்து விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.