
மைக்ரோசாப்ட் சேவை பிரச்சனையால் சென்னையில் இருந்து 20 விமானங்கள் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் crowd strike-ன் இணையதள கோளாறால் மைக்ரோசாப்ட் சேவை முடங்கியுள்ளது. இதன் காரணமாக விமான சேவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. . அதன்படி பெங்களூருவில் 90 சதவீதம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் சென்னையிலும் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் சேவை பிரச்சனையால் சென்னையில் இருந்து ஏற்கனவே 14 விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 6 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போதுவரை மொத்தம் 20 விமானங்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மைக்ரோ சாப்ட் சேவை பிரச்சனையால் செக் இன் செய்ய முடியாமல் விமானங்கள் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.