நாட்டையே உலுக்கிய ஒடிசா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். பலரின் உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவி வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேசம் ஜபல்பூரில் எரிவாயு நிரம்பிய டேங்கர்களை ஏற்றி சென்ற சரக்கு ரயில் இன்று தடம்புரண்டது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாரும் உயிரிழக்கவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.