பாம்பன் கடலின் நடுவே ரூபாய் 550 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி பிரதமர் மோடி புதிய பாம்பன் பாலத்தின் கட்டுமான பணிகளை காணொளி மூலமாக தொடங்கி வைத்தார். இதற்கான பணி ஆறு ஆண்டுகள் நடைபெற்றது.

இன்று பிரதமர் மோடி கொடி அசைத்த உடன் தூக்கு பாலத்தின் வழியாக மண்டபம்-ராமேஸ்வரம் இடையே ரயிலும், பாலத்தின் அடியில் கடலோர காவல் படையின் கப்பலும் கடந்து சென்றது. இந்த நிலையில் ராம நவமியை முன்னிட்டு ராமநாத சுவாமி கோவிலில் பிரதமர் கோடி சாமி தரிசனம் செய்தார்.